பாகற்காய், கொத்தவரை:
பாகற்காய் மற்றும் கொத்தவரங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் இதனை வாரம் ஒரு
முறையாவது கட்டாயம் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்.
வாழைக்காய்:
வாழைக்காய் மற்றும் வாழைப்பூ வயிற்றில் சிறுநீரக கல் உருவாகுவதை தடுக்கிறது. வாழைக்காய்
உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இப்போது இந்த
பிரச்சனை நிறைய பேருக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதனை உணவில்
சேர்த்துக் கொண்டு வந்தால், சிறு கற்கள் கூட சிறுநீருடன் வெளியேறிவிடும். மேலும் சர்க்கரை
நோயையும் கட்டுப்படுத்துகிறது.
அவரைக்காய்:
அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. சுவாசப் பிரச்சனை
இருப்பவர்கள் அடிக்கடி அவரைக்காயை சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு
அதிகரித்து நல்ல நிவாரணம் காண்பீர்கள்.
கத்திரிக்காய்:
கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து இதனை தவிர்க்கின்றனர். ஆனால்
அனைவரையும் அச்சுறுத்தும் கேன்சர் நோய் அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடுபவர்களுக்கு
வருவதில்லையாம்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காய் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை
கொண்டுள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முருங்கைக்காய் சாப்பிடலாம்.
முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும்.
இது சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள்
வைத்திருக்க உதவுகிறது .
உருளைக்கிழங்கு:
வாய்வு என்று ஒதுக்கி வைக்கப்படும் உருளைக்கிழங்கில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆற்றல் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனை சமைக்கும் பொழுது பெருங்காயம் மற்றும்
பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத் தொல்லை ஏற்படாது.
வெண்டைக்காய்:
வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 63 % வரை
கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இவை மார்பக புற்று நோயின் அபாயத்தை பெருமளவு
குறைக்கின்றன. உடல்பருமன் இருப்பவர்கள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல்
எடை வெகுவாகக் குறைந்துவிடும்.
பீர்க்கங்காய்:
இளமையில் வரும் கண் பார்வை குறைபாட்டை எளிதாக சரி செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கு அடிக்கடி பீர்க்கங்காய் சமைத்துக் கொடுப்பது நல்லது. பீர்க்கங்காயில் ஏராளமான
ஊட்டச்சத்துக்கள நிறைந்திருக்கின்றன.
புடலங்காய், சுண்டைக்காய்:
புடலங்காய் மற்றும் சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சமைத்துக் கொடுத்தால்
மிகவும் நல்லது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கான டயட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள
வேண்டிய காய்கறிகளில் ஒன்று புடலங்காய்.
சின்ன வெங்காயம்:
சின்ன வெங்காயத்தில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் சொல்லில்
அடங்காதவை. எத்தகைய கொடிய நோய் தொற்றும் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி சின்ன
வெங்காயத்தை உணவில் தாராளமாக சேர்த்து வர வேண்டும். இது அழற்சி எதிர்ப்பு தன்மை
கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக
செயல்படுகிறது.
கருணைக்கிழங்கு:
நாக்கு அரிக்கும் என்பதால் கருணைக் கிழங்கை உணவில் தவிர்த்து வருகிறோம். ஆனால்
கருணைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்
கொள்வது மிகவும் நல்லது.
பூசணிக்காய்:
நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில் (Pumpkin)
இருப்பதால், நாம் இதை வாரம் இரண்டு முறைகள் அல்லது தினமும் உணவில் சேர்த்து வந்தால்
ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை
சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி பூசணிக்காய் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. முக்கியமானது. வெள்ளரிக்காய்
கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு
மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும்.
முட்டைகோஸ்:
மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் முட்டைகோஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும்.
செரிமானத்திற்கும் சிறந்த தேர்வாக விளங்குகிறது.
ஆர்டர் செய்ய Harvest Fresh வலைதளத்திற்கு வருக